கணவன், மனைவி கைது

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஸ்டேஷன் எஸ்.ஐ., சிற்றரசு மற்றும் போலீசார், ஊத்தங்கரை நான்கு சாலை சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலை அருகே, நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர்.

அப்போது, ஊத்தங்கரையை சேர்ந்த முகமது அசாருதீன், 26, என்பவர், மதுபோதையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசி, பொது அமைதிக்கு இடையூறு விளைவித்தார். அவருக்கு ஆதரவாக அவரது மனைவி சோட்டிமா, 28, செயல்பட்டார். அதனால், கணவன், மனைவி இருவரையும், போலீசார் கைது செய்து, பின் ஜாமினில் விடுவித்தனர்.

Advertisement