கொலை வழக்கில் ஜாமினில் வந்து கோர்ட்டில் ஆஜராகாதவர் மீது வழக்கு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி அருகே சூடுகானப்பள்ளியை சேர்ந்தவர் சக்காரலப்பா, 41. இவர் மீது ஓசூர் டவுன் ஸ்டேஷனில் கடந்த, 2011ம் ஆண்டு ஒரு கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஓசூர் ஜே.எம்., - 2 நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
ஜாமினில் வெளியே வந்த சக்காரலப்பா, நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதனால், டவுன் ஸ்டேஷன் தலைமை காவலர் பருவதராஜன் புகார்படி, சக்காரலப்பா மீது, டவுன் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement