ஓசூர் மாநகர தி.மு.க., செயற்குழு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர, தி.மு.க., செயற்குழு கூட்டம், அவைத்தலைவர் செந்தில்குமார் தலைமையில் நேற்று நடந்தது.
மாநகர செயலாளரும், மேயருமான சத்யா பேசும் போது, ''எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சி போல் மக்கள் பணியாற்ற வேண்டும். தி.மு.க.,வினர் யாரும் சோர்ந்து போய்விட கூடாது. விலைவாசி உயர்வு, பொருளாதாரம், கல்வி மற்றும் சுகாதாரம் என பல துறைகளில், தமிழகம் பின்நோக்கி செல்வதை மக்கள் உணர்ந்து வருகின்றனர். தமிழகத்தை பாதுகாக்கும் இயக்கம், தி.மு.க., மட்டும் தான்.தமிழக எதிர்க்கட்சி தலைவரும், கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி பிறந்தநாளை, ஒவ்வொரு வார்டிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. ஆனால், தோல்வி செயற்கையானதாக இருக்கக்கூடாது. வேட்பாளர்கள் தேர்வில் சிலருக்கு ஏமாற்றம் இருந்தாலும், யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும், அனைவரும் ஒற்றுமையாக உழைத்து, வெற்றி பெற செய்ய வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை செயலாளர் விஜயகுமார், மாநகராட்சி வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, பகுதி செயலாளர்கள் வெங்கடேஷ், ராமு, ராஜா, இளைஞரணி மாவட்ட
அமைப்பாளர் சுமன் உட்பட பலர் பங்கேற்றனர்.