அமெரிக்க வீரருக்கு கொரோனா: வெண்கலம் வென்று ஆறுதல்

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் 200 மீ., ஓட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் நோவா லைல்ஸ் வெண்கலம் வென்றார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் பைனல் நடந்தது. இதில் போட்ஸ்வானா வீரர் லெட்சில் டெபோகோ (19.46 வினாடி) தங்கம் வென்றார். அமெரிக்காவின் கென்னத் பெத்நாரெக் (19.62 வினாடி), நோவா லைல்ஸ் (19.70 வினாடி) முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
பைனலில் (200 மீ., ஓட்டம்) இலக்கை அடைந்த பின், அமெரிக்காவின் நோவா லைல்ஸ் மைதானத்தில் அப்படியே சரிந்தார். மூச்சு திணறிய இவருக்கு உடனடியாக மருத்துவ முதலுதவி அளிக்கப்பட்டது. பின் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டார். சமீபத்தில் 100 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற இவருக்கு, இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. தனிமைப்படுத்தப்பட்ட இவர், 'மாஸ்க்' அணிந்திருந்தார். விதிமுறைப்படி 200 மீ., ஓட்டத்தில் பங்கேற்று வெண்கலம் வென்றார். இவர், 4x100 மீ., தொடர் ஓட்டத்தில் பங்கேற்கவில்லை. இவருக்கு பதிலாக கோர்ட்னி லிண்ட்சே சேர்க்கப்பட்டார்.

Advertisement