நழுவிய ஏழு பதக்கங்கள் * இந்திய நட்சத்திரங்கள் சோகம்

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட சறுக்கல்களால் இந்தியாவுக்கு இதுவரை 7 பதக்கங்கள் கைநழுவின.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 65 வீரர், 45 வீராங்கனை என மொத்தம் 110 பேர், 16 போட்டிகளில் களமிறங்கினர். டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கம் வென்ற நிலையில், இம்முறை இந்தியா எப்படியும் இரட்டை இலக்க பதக்கங்கள் பெறும் என நம்பப்பட்டது.
மாறாக, நாளை போட்டி முடியவுள்ள நிலையில் இந்தியாவுக்கு 5 பதக்கம் மட்டுமே கிடைத்தன. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா (வெள்ளி), ஹாக்கி (வெண்கலம்), துப்பாக்கிசுடுதலில் மனுபாகர், ஸ்வப்னில், கலப்பு இரட்டையரில் மனுபாகர்-சரப்ஜோத் சிங், வெண்கலம் கைப்பற்றினர்.
எப்படியும் பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பாட்மின்டன் இரட்டையரில், சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி காலிறுதியில் தோற்றது. தவிர, தீபிகா குமாரி, லவ்லினா, நிஷாந்த் தேவ் காலிறுதியில் வீழ்ந்தனர்.
அதேநேரம் இந்தியாவின் ஏழு பதக்கங்கள் கடைசி நேரத்தில் நழுவின.
* மல்யுத்தத்தில் வினேஷ் போகத் பைனலுக்கு முன்னேறினார். ஆனால் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட தங்கம் அல்லது வெள்ளி கிடைக்காமல் போனது.
* பளுதுாக்குதலில் மீராபாய் சானு, 1 கிலோ குறைவாக துாக்கியதால் வெண்கலம் நழுவியது.
* துப்பாக்கிசுடுதலில் மனுபாகர் (25 மீ., பிஸ்டல்), அர்ஜுன் (10 மீ., ஏர் ரைபிள்) 4வது இடம் பிடித்தனர்.
* வில்வித்தையில் திராஜ், அன்கிதா ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் வீழ்ந்தது.
* லக்சயா சென் (பாட்மின்டன்) வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தோற்றார்.
* மகேஷ்வரி, அனன்ஜீத் சிங் ஜோடி (துப்பாக்கிசுடுதல்), 1 புள்ளி வித்தியாசத்தில் வெண்கலத்தை இழந்தது.

Advertisement