உக்ரைன் போரில் நினைத்ததை சாதிப்போம்: ரஷ்ய அதிபர் புடின் உறுதி

1

மாஸ்கோ: "உக்ரைன் போரில் நாங்கள் நிர்ணயித்த இலக்குகள் அனைத்தையும் அடைந்தே தீருவோம்," என்று ரஷ்ய அதிபர் புடின் உறுதிபட தெரிவித்துள்ளார்.


கடந்த 2022, பிப்ரவரியில் மாஸ்கோவுடன் நான்குலுகான்ஸ்க், டொனெட்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகிய உக்ரைன் பகுதிகளை இணைத்தது. இந்த இணைவுகளின் மறு ஒருங்கிணைப்பு நாளின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழா நடந்தது. இந்நிகழ்ச்சி குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.

அவர் பேசியதாவது:

ரஷ்ய படையினர், உக்ரைனில் மூன்று ஆண்டுகளாக போரிட்டு வருகின்றனர். இந்த மோதலில், நாங்கள் நிர்ணயித்த அனைத்து இலக்குகளையும் அடைந்தே தீருவோம்.

உண்மை எங்கள் பக்கம் உள்ளது. நாங்கள் நினைத்ததை சாதிப்போம்.
புதிய -நாஜி சர்வாதிகாரத்திற்கு எதிராக ரஷ்ய மொழி பேசுபவர்களை பாதுகாப்பதற்காகவே, உக்ரைனுக்குள் படைகளை அனுப்பினோம்.
இவ்வாறு அந்த வீடியோவில் புடின் பேசியுள்ளார்.

Advertisement