லீக் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 'ஏர் - இந்தியா' அணி வெற்றி

சென்னை, சென்னையில் இயங்கி வரும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த கிரிக்கெட் லீக் சாம்பியன்ஷிப் போட்டியில், 'ஏர் - இந்தியா' அணியை எதிர்த்து, அப்பாயா அணி களமிறங்கியது.

முதலில் ஆடிய 'ஏர் - இந்தியா' அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அடுத்து களமிறங்கிய அப்பாயா அணி 15.4 ஓவர்களில், ஏழு விக்கெட் இழந்து 63 ரன்கள் எடுத்தது. மழையால் ஆட்டம் தடைபட்டதால் 'டக்வொர்த் லுாயிஸ்' அடிப்படையில், ஏர் இந்தியா அணியினர் வெற்றி பெற்றனர். அணி வீரர் ரோகன், 54, ரன்கள் குவித்ததோடு, ஐந்து விக்கெட்டுகளையும் சாய்த்து வெற்றிக்கு உதவினார்.

Advertisement