பார்சல் சர்வீஸ்களில் ஆய்வு செய்ய உத்தரவு

தேனி: மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வரும் பார்சல் சர்வீஸ்களை ஆய்வு செய்வும், திடீர் சோதனைகள் நடத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்டத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த கலெக்டர் ஷஜீவனா, எஸ்.பி., சிவபிரசாத் சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து, கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டும் வருகிறது.

இந்நிலையில் சில போதைப்பொருட்கள் பார்சல் சர்வீஸ்கள், கூரியர் மூலம் சப்ளை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது.இதனால், லாரிகள் மூலம் மாவட்டத்திற்கு வரும் பார்சல்கள், அதனை கையாளும் நிறுவனங்கள், ஆன்லைன் மூலம் பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனங்களில் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பள்ளி, கல்லுாரிகளில் போதைப்பொருட்களை மாணவர்களுக்கு விற்பனை செய்ய, மாணவர்களில் சிலரை சமூக விரோத கும்பல்கள் நியமிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க கல்வி நிறுவனங்கள் மூலம் சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement