துணைத்தலைவர் மீது நடவடிக்கை ஊராட்சி தலைவர், உறுப்பினர் மனு

அவிநாசி : அவிநாசி வட்டம், கருமாபாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபையில், ஊராட்சியில் நடைபெற்ற பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, ஊராட்சி செயலாளர் ராம்குமார் மற்றும் ஊராட்சி தலைவரின் கணவர் மீது ஊராட்சி துணைத்தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் புகார் தெரிவிக்கப்பட்டது; வாயில் கருப்பு துணி கட்டி போராட்டமும் நடந்தது.

இந்நிலையில், ''ஊராட்சி துணைத்தலைவர் அளித்துள்ள புகார்கள் ஆதாரமற்றவை; ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் நடந்து முடிந்த பணிகளுக்கு தொகை ஒதுக்குவதிலும் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறார். இதனால் ஊராட்சிக்கு அவப்பெயர் உண்டாகிறது.

துணைத் தலைவர் அளித்துள்ள புகார்களை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். இல்லாவிடில், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.,(கிராமம்) விஜயகுமாரிடம் ஊராட்சி தலைவர் பூங்கொடி மற்றும் மன்ற உறுப்பினர்கள் மனு அளித்தனர்.

Advertisement