ராஜிவ்காந்தி மருத்துவமனையில் உலக மன நல தின விழிப்புணர்வு

புதுச்சேரி, : புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நடந்த உலக மன நல தின நிகழ்ச்சி நடந்தது.

ஆண்டுதோறும், அக்., 10ம் தேதி உலக மனநல தினம் கொண்டாடப்படுகி றது. இந்த நிலையில், இந்தாண்டில் புதுச்சேரி, ராஜிவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், 'பணியிட மனநலம்' எனும் தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது.

இதில், ஹான்ஸ் பவுண்டேஷன் மற்றும் மாவட்ட ஆரம்ப மருத்துவ தலையீடு மையம் ஆகியவை இணைந்து, அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் பணியிட மனநலம் மற்றும் மன அழுத்த மேலாண்மை குறித்து பயிற்சி வழங்கியது.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு அதிகாரி குரு பிரசாத் வரவேற்றார். மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அய்யப்பன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

இதில் விழிப்புணர்வு பயிற்சியை, மனநல டாக்டர் பாலன் பொன்மணி ஸ்டீபன் வழங்கினார். ஹான்ஸ் பவுண்டேஷன் சார்பில், பணியிடத்தில் எப்படி பணிச்சுமை இல்லாமல், ஒரு இல்லத்தரசி கையாள்கிறாள் என்பது குறித்து ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது.

இந்த நாடகத்தை அன்னை தெரசா முதுகலைப்பட்டதாரி மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் அரங்கேற்றினர்.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனை உள்ளிருப்பு அதிகாரி ரொசாரியா, டாக்டர் சரவணன், ஹான்ஸ் பவுண்டேஷன் உறுப்பினர் கள், டாக்டர்கள், பட்ட மேற்படிப்பு டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிடடோர் கலந்து கொண்டனர்.

Advertisement