ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் திட்டவட்டம்


புதுடில்லி: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.


ரெப்போ விகிதம் என்பது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். இந்த ரெப்போ வட்டி விகிதத்தில், 10வது முறையாக மாற்றம் செய்யப்படவில்லை. இது குறித்து மும்பையில் நிருபர்கள் சந்திப்பில் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பத்தாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. அது 6.5 சதவீதமாகவே நீடிக்கிறது. இதனால், வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது.



உள்நாட்டு உற்பத்தி




பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் அதே வேளையில், பணவீக்கத்தை கட்டுப் படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. பண வீக்கம் விகிதம் நடப்பு நிதியாண்டில் 4.5% சதவீதத்திற்கு மேல் இருக்கும். இந்த நிதியாண்டில், ஜி.டி.பி., 6.7% ஆக அதிகரித்துள்ளது. 2012-13ம் ஆண்டிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலீட்டின் பங்கு அதிகரித்து வருகிறது. 2025-26ம் ஆண்டின் முதல் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.3% ஆக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement