டில்லி முதல்வர் ஆதிஷி அதிகாரப்பூர்வ அரசு பங்களாவிலிருந்து வெளியேற்றம்

11

புதுடில்லி: டில்லி ஆம்ஆத்மி முதல்வர் ஆதிஷிக்கு சொந்தமான உடைமைகள் மற்றும் பொருட்கள் அவரது அலுவலக இல்லத்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

டில்லி ஆம் ஆத்மி கட்சி முதல்வராக ஆதிஷி கடந்த மாதம் 21-ம் தேதி பதவியேற்றார். இவரது அதிகாரப்பூர்வ பங்களா டில்லி எண்6, பிளாக்ஸ்டாப் சாலையில் உள்ளது.
இங்கு முன்னர் அரவிந்த் கெஜ்ரிவால் வசித்து வந்த நிலையில் சமீபத்தில் காலி செய்துவிட்டார். அந்த பங்களாவில் தான் கடந்த இரு தினங்களுக்கு முன் முதல்வர் ஆதிஷி குடியேறினார்.

இந்நிலையில் இங்கு முதல்வர் ஆதிஷிக்கு சொந்தமான சில பொருட்கள் திடீரென வெளியே வீசி எறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் ஆதிஷியை அரசு பங்களாவிலருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்ற துணை நிலை கவர்னர் வி. சக்சேனா உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ., கொடுத்த அழுத்தம் காரணமாகவே துணை நிலை கவர்னர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், அவரது அலுவலகம் சீல் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது இல்லம் சீல் வைக்கப்பட்டது.

நாட்டில் முதன் முறையாக முதல்வரை கட்டாயப்படுத்தி அரசு பங்களாவை காலிசெய்ய உத்தரவிட்ட சம்பவம் நடந்துள்ளதாக முதல்வர் அலுவலகம் துணை நிலை கவர்னர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

Advertisement