அன்புமணி பிறந்தநாள் கட்சியினர் கொண்டாட்டம்


அன்புமணி பிறந்தநாள்
கட்சியினர் கொண்டாட்டம்
வாழப்பாடி, அக். 10-
பா.ம.க., தலைவர் அன்புமணி பிறந்தநாளையொட்டி, அயோத்தியாப்பட்டணம் கோதண்டராமர் கோவிலில் அக்கட்சி சார்பில் சிறப்பு பூஜை நேற்று நடந்தது. தொடர்ந்து ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வடக்கு மாவட்ட செயலர் நாராயணன், மாவட்ட அமைப்பு செயலர் செல்வம், வன்னியர் சங்க மாநில செயலர் கார்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல் உடையாப்பட்டியில் உள்ள ஆதரவற்றோர், முதியோர் இல்லத்துக்கு மாநில மாணவர் சங்க செயலர் விஜயராசா தலைமையில் உணவு வழங்கப்பட்டது.
சங்ககிரியில், நகர செயலர் அய்யப்பன் தலைமையில் கட்சியினர், கேக் வெட்டி மக்களுக்கு வழங்கினர். மாவட்ட விவசாய அணித்தலைவர் கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்ரமணி, ஒன்றிய தலைவர் வடிவேல், செயலர் பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
தாரமங்கலத்தில் தனியார் மருத்துவமனை, பா.ம.க., இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமை, முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்தி தொடங்கி வைத்தார். தொடர்ந்து தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைத்தில் ரத்ததான முகாம் நடந்தது. அதில், 54 பேர் ரத்ததானம் வழங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ., கண்ணையன், மாநில செயற்குழு உறுப்பினர் பாபு, மாவட்ட செயலர் செல்வகுமார் பங்கேற்றனர்.

Advertisement