சிறுவர் விளையாட்டு பூங்கா சேதம் சீரமைக்க நடவடிக்கை தேவை

திருக்கனுார: விநாயகம்பட்டில் சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா பராமரிப்பு இன்றி உபகரணங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

திருபுவனை தொகுதி விநாயகம்பட்டு மெயின் ரோட்டில், பொதுப்பணித் துறை நீர்பாசன பிரிவு மூலம் கடந்த 2004ம் ஆண்டு, சிறுவர் விளையாட்டு பூங்கா சுற்றுச்சுவருடன் அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில், சிறுவர், சிறுமியர் விளையாட ஏணி, ஊஞ்சல், சறுக்கு மரம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் இருந்தன.

பூங்கா போதிய பராமரிப்பு இல்லாததால், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்து கிடக்கின்றன.

இதனால், பூங்கா சிறுவர்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது. பூங்கா முழுதும் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது.

கிராமப்புறங்களில் விளையாட்டு பூங்காக்கள் ஏதுவும் புதிதாக அமைக்கப்படாத நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன், அமைக்கப்பட்ட ஒரே ஒரு சிறுவர்கள் விளையாட்டு பூங்காவும் போதிய பராமரிப்பு இன்றி சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

எனவே, சேதமடைந்த விளையாட்டு பூங்காவை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement