ஆஸ்திரேலியா 'ஹாட்ரிக்' வெற்றி

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று துபாயில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மோதின. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா 'பீல்டிங்' தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் முனீபா (7), சித்ரா (12) ஜோடி துவக்கம் தந்தது. அலியா அதிகபட்சம் 26 ரன் எடுத்தார். மற்றவர்கள் கைவிட, பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 82 ரன்னுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியாவின் ஆஷ்லெய் 4 விக்கெட் சாய்த்தார்.
பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பெத் மூனே (15), கேப்டன் அலிசா (37) ஜோடி நல்ல துவக்கம் தர வெற்றி எளிதானது. ஆஸ்திரேலியா 11 ஓவரில் 83/1 ரன் எடுத்து, 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது. இத்தொடரில் 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.

Advertisement