அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை மாநாடு

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் அரசு ஊழியர் சங்கத்தின் 15வது, வட்டக்கிளை மாநாடு, ஊர்வலம் நடந்தது. ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் முருகன், துணைத்தலைவர் ஞானத்தம்பி, மாவட்டச் செயலாளர் நீதிராஜா, வட்டகிளை தலைவர் ஜெயபாலன், செயலாளர் இந்துராணி, இணைச்செயலாளர் சுப்பிரமணியன், துணைத்தலைவர் ஆசை, பொருளாளர் விக்ரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வரவேண்டும். நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நுாலகர்கள், எம்ஆர்பி., செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணைச் செயலாளர் சிவமணி நன்றி கூறினார்.

Advertisement