செயற்கைக்கோள் உருவாக்கும் மாணவர்கள்

சோழவந்தான்: சோழவந்தான் கல்வி சர்வதேச பள்ளி மாணவர்கள் செயற்கைக்கோள்களுடன் தொடர்பு கொள்ளும் சிறு செயற்கைக்கோளை உருவாக்குகிறார்கள்.

இப்பள்ளியில் சிறிய செயற்கைக்கோள்கள், பெரிய பயன்பாடுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கும், இந்தியன் டெக்னாலஜி காங்கிரஸ் அசோசியேஷன் மற்றும் மாணவர்கள் பங்களிப்புடன் கூடிய 75 செயற்கைக்கோள் திட்டம் மற்றும் கல்வி செயற்கைக்கோள் திட்ட துவக்க விழா நடந்தது. கல்விக் குழும தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

75 செயற்கை கோள் திட்ட இயக்குனர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், ''கல்வி குழும மாணவர்கள் உருவாக்கும் செயற்கைக்கோள் 3 கிலோ எடையில் ரூ.2 கோடி மதிப்பில் உருவாக்கப்பட உள்ளது. அது மற்ற செயற்கைகோளுடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெறும். தமிழகத்தில் பள்ளிகள் அளவில் முதல் செயற்கை கோளை உருவாக்கும் பள்ளியாக இப்பள்ளி உள்ளது'' என்றார். யுனிசெப் இந்தியா செயலாளர் நிகில் ரியாஸ், அஸ்வின் ரெட்டி, இன்பிஷத் யூசுப் நாத், சைனாத் வம்சி பங்கேற்றனர்.

Advertisement