மக்காச்சோளத்தில் பயிர் மேலாண்மை

மதுரை: சேடபட்டி கு.ஆண்டிபட்டி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சி நடந்தது.

வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் ராமசாமி பேசுகையில் ''மக்காச்சோள பயிர்களுக்கு மஞ்சள் வண்ண அட்டை, விளக்கு பொறி, இனக்கவர்ச்சி பொறிகளையும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம் போன்ற இயற்கை உரங்களையும் பயன்படுத்த வேண்டும். உளுந்து, தட்டை பயறு, துவரையை ஊடுபயிராக சாகுபடி செய்தால் பூச்சி நோய் தாக்குதலில் இருந்து மக்காச்சோள பயிர்களை காப்பாற்றலாம்'' என்றார்.

துணை வேளாண் அலுவலர் பாண்டியன், வேளாண் பொறியியல் துறை பொறியாளர் செல்வேந்திரன், இயற்கை வேளாண் பயிற்றுநர் காமேஷ், தொழில்நுட்ப மேலாளர் கணேசராஜா ஆகியோர் பேசினர். உதவி தொழில்நுட்ப மேலாளர் சத்யா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Advertisement