மதுரையில் கலை கிராமம் அமைக்க கைவினைஞர்கள் விருப்பம்

திருநகர்: மதுரையில் அனைத்து கைவினை கலைஞர்கள் உள்ளடக்கிய கைவினைஞர்கள் கலை கிராமம் உருவாக்கி கொடுத்தால் கைவினை கலைஞர்களும் பயன்பெறுவர் என விளாச்சேரி பொம்மை உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

பொம்மைகள் தயாரிப்பதில் தமிழக அரசு விருது பெற்ற மூத்த கைவினை கலைஞர் ராமலிங்கம் கூறியதாவது: மதுரையில் களிமண், காகிதகூழ், சிமென்ட் பொம்மைகள், கற்சிற்பங்கள், மர சிற்பங்கள், மண்பாண்டங்கள், ஐம்பொன் சிலைகள் தயாரிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். அனைவரும் ஒரே இடத்தில் உற்பத்தி செய்யும் போது வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர் நேரடியாக கொள்முதல் செய்ய கலை கிராமம் வாய்ப்பாக அமையும்.

தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களுக்கும் வருவாய் அதிகரிக்கும். கைவினை உற்பத்தி பொருட்கள் ஒரே இடத்தில் கிடைப்பதால் கொள்முதல் செய்ய வருபவர்களுக்கும் எளிதாக இருக்கும். இதற்கு விளாச்சேரி கிராமம் ஏற்ற இடமாக உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்டோர் பரம்பரை பரம்பரையாக பொம்மைகள் தயாரித்து வருகின்றனர் என்றார்.

Advertisement