காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களுக்கு 'கடிவாளம்'

வெள்ளைகேட்:காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழிச் சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி தொழில் வழி தட திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.

தற்போது, காஞ்சிபுரம் - பரமேஸ்வரமங்கலம் கிராமம் வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தார் சாலை போடாத இடத்தில், எம்-சாண்ட் கொட்டி சிமென்ட் கற்களை அடுக்கி, சாலையின் இருபுறமும் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.

புதிதாக போடப்பட்ட நான்குவழிச் சாலையில், அசுர வேகத்தில் வாகனங்கள் செல்கின்றன. இதனால், அடிக்கடி விபத்து ஏற்பட நேரிடுகிறது.

குறிப்பாக, வெள்ளைகேட், கம்மவார்பாளையம், பள்ளூர், சேந்தமங்கலம் ஆகிய முக்கிய சந்திப்பு சாலைகளில் வாகன விபத்து அடிக்கடி நடக்கின்றன.

இதை தவிர்க்க, பொன்னேரிக்கரை போலீசார் வெள்ளைகேட், கோவிந்தவாடி, படுநெல்லி உள்ளிட்ட பகுதிகளில் பேரிகார்டு தடுப்பு அமைத்து உள்ளனர்.

இதனால், வாகனங்களின் வேகத்தை குறைத்து செல்வதால், வாகன விபத்து தவிர்க்க வழி வகுத்து உள்ளது என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement