ஹர்மன்பிரீத் சிங்கிற்கு ரூ.78 லட்சம்: அதிகபட்ச விலைக்கு ஒப்பந்தம்!

1

புதுடில்லி: இந்திய ஹாக்கி அணி கேப்டனும், ஹாக்கி இந்தியா லீக் வீரருமான ஹர்மன்பிரீத் சிங்கை, அதிகபட்சமாக ரூ.78 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்தது சூர்மா ஹாக்கி கிளப்.

இதற்கு முன்னர், அபிஷேக் ரூ.72 லட்சத்திற்கு பெங்கால் டைகர் கிளப் ஏலம் எடுத்திருந்தது. இந்திய ஹாக்கி அணியின் துணை கேப்டனும், நடுத்தள பீல்டராகவும் உள்ள ஹர்திக் சிங் உ.பி., ருத்ராஸ் கிளப்பால் ரூ.70 லட்சத்திற்கும் ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். தற்போது சூர்மா கிளப் அதிகபட்சமாக ரூ.78 லட்சத்திற்கு ஹர்மன்பரீத்தை ஏலம் எடுத்துள்ளது.


2017ம் ஆண்டிற்கு பிறகு, ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்காக மீண்டும் நடத்தப்படும் ஹாக்கி லீக் தொடர் வரும் டிசம்பர் 28ம் தேதி தொடங்கும்.
ஆண்களுக்கான இறுதிப் போட்டி, ஓடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா ஹாக்கி ஸ்டேடியத்தில் பிப்ரவரி 1, 2025 அன்று நடைபெறும்.


பெண்களுக்கான இறுதி போட்டி, ஜனவரி 26ல் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மராங் கோம்கே ஜெய்பால் சிங் அஸ்ட்ரோ டர்ப் ஹாக்கி ஸ்டேடியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement