மருத்துவமனையில் உத்தவ் தாக்கரே! என்னாச்சு... கவலையில் தொண்டர்கள்

4

மும்பை; மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.



2012ம் ஆண்டு உத்தவ் தாக்கரேவுக்கு இதயத்தில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அதற்கான ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு 8 ஸ்டென்ட்டுகள் வைக்கப்பட்டன.

அதன் பிறகு 2016ம் ஆண்டில் ஒரு முறை ஆஞ்சியோ சிகிச்சையை உத்தவ் தாக்கரே எடுத்துக்கொண்டார். இந் நிலையில் உத்தவ் தாக்கரே மீண்டும் மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு இதய தமனிகளில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறதா என்று பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டு உள்ளனர். உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் இருக்கும் விவரம் அறிந்த தொண்டர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

அதே நேரத்தில் விரைவில் மருத்துவ பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்று, உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். இன்றே உத்தவ் தாக்கரே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

Advertisement