சுருட்டப்பள்ளி அணைக்கட்டில் நீர் திறப்பு

ஊத்துக்கோட்டை,
ஆந்திர மாநிலத்தில் உருவாகி தமிழகத்தை நோக்கி வரும் ஆரணி ஆற்றில், தமிழக - -ஆந்திர எல்லையில் சுருட்டப்பள்ளி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.

கடந்த, 1954ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணைக்கட்டில் இருந்து ஊத்துக்கோட்டை உள்ளிட்ட, 15 ஏரிகளுக்கு உபரிநீர் திறந்து விட ஐந்து மதகுகள் உள்ளன.

சில தினங்களாக சுருட்டப்பள்ளி மற்றும் நந்தனம் மலைப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக மழைநீர் ஆரணி ஆற்றில் கலந்து சுருட்டப்பள்ளி அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது.

தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியதை தொடர்ந்து நேற்று காலை, 11:00 மணிக்கு சுருட்டப்பள்ளி அணைக்கட்டில் இருந்து ஐந்து மதகுகள் வாயிலாக வினாடிக்கு, 300 கன அடி வீதம் திறக்கப்பட்டது.

Advertisement