திருவள்ளூர் நகராட்சியுடன் தலக்காஞ்சேரியை இணைக்க எதிர்ப்பு

திருவள்ளூர்,

திருவள்ளூர் நகராட்சியுடன் இணைய தலக்காஞ்சேரி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.

திருவள்ளூர் ஒன்றியம், தலக்காஞ்சேரி ஊராட்சியைச் சேர்ந்த கிராமவாசிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தலக்காஞ்சேரி ஊராட்சியில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனைவரும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் நுாறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து அதில் கிடைக்கும் ஊதியத்தில் குடும்பம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தலக்காஞ்சேரி ஊராட்சியை, திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாக தெரிய வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. எனவே, கிராமவாசிகள் நலன் கருதி, நகராட்சியுடன் இணைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement