தொழிற்சாலை உரிமம் புதுப்பிக்க அழைப்பு


தொழிற்சாலை உரிமம்
புதுப்பிக்க அழைப்பு
ஈரோடு, அக். 15-
ஈரோடு இணை இயக்குனர் (தொழில் துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்) வினோத்குமார், வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலைகள், வரும் காலண்டர் ஆண்டுக்கான (2025) உரிமத்தை புதுப்பிக்க, https://dish.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க, வரும், 31ம் தேதி கடைசி நாளாகும். உரிம கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். தாமதமாக பெறப்படும் விண்ணப்ப படிவங்களுக்கு தாமத கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement