கந்தசாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம்
மல்லசமுத்திரம்: சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசியில், சூரசம்ஹார விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி, இன்று காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்குகிறது.
இரவு, 7:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா நடைபெறும். நாளை, கந்தசஷ்டியை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு, கோவில் அருகே சூரசம்ஹார விழா நடக்கிறது. 8 காலை, மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும், மாலை திருக்கல்யாண வைபமும் நடக்கிறது. இரவு, சுவாமி புறப்பாடு மற்றும் ஊஞ்சல்பாலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, செயல் அலுவலர் குணசேகரன், பரம்பரை அறங்காவலர் சரஸ்வதி ஆகியோர் செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement