விழிப்புணர்வு பிரசார வாகனம் துவக்கம்
நாமக்கல்: வட்டார வேளாண் துறை சார்பில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம்-2024-25 திட்ட விளக்க விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, நாமக்கல் உயிரியியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடந்தது. அட்மா தலைவர் பழனிவேல் தலைமை வகித்து, ஊட்டமிகு சிறுதானியங்களின் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார்.
வட்டார வேளாண் உதவி இயக்குனர் சித்ரா கூறியதாவது: ஊட்டமிகு சிறுதானியங்களான சோளம், கம்பு, ராகி, வரகு, சாமை, பனிவரகு, குதிரைவாலி ஆகியவற்றின் சிறப்பியழ்புகள், விதை மானியம், பயிர் பாதுகாப்பு திட்டங்கள் உள்ளிட்ட விபரங்களை, பொது மக்களிடம் சென்றடையவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நாமக்கல் வட்டார அனைத்து பஞ்.,களிலும் விவசாயிகளை சந்தித்து, தெளிவுபடுத்த வேண்டும். இதற்காக, வேளாண் துறை மூலம், வாகனங்கள் வாயிலாக ஊட்டமிகு சிறுதானியங்கள் குறித்த விளம்பர தட்டிகள், விழிப்புணர்வு பிரசாரம், துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.