கோட்டை கருப்பண்ண சுவாமிக்கு சிறப்பு பூஜை

ப.வேலுார்: ப.வேலுாரில் இருந்து கரூர் செல்லும் பழைய பைபாஸ் சாலையில், ராஜா வாய்க்கால் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் கோட்டை கருப்பண்ணார் கோவில் அமைந்துள்ளது. இங்கு, கருப்பண்ண சுவாமிக்கு பித்தளையால் செய்யப்பட்ட திருவாச்சி வைக்கும் விழா, நேற்று முன்தினம் நடந்தது.

இதையொட்டி, நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. தொடர்ந்து, மதியம், 2:00 மணிக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement