பட்டப்பகலில் மூதாட்டியை தாக்கி 9.5 பவுன் நகை, ரூ.70,000 கொள்ளை

ராசிபுரம்: பட்டப்பகலில் மூதாட்டியை தாக்கி விட்டு, 9.5 பவுன், 70,000 ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டியை சேர்ந்தவர் செங்கோட்டையன் மனைவி கமலம், 61. கணவர் இறந்ததால் தனியாக வசித்து வருகிறார். நேற்று மதியம், 2:00 மணிக்கு, விவசாய நிலத்தில் கமலம் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத, 2 மர்ம நபர்கள் கமலம் வீட்டிற்குள் புகுந்தனர். அவர்களை பார்த்த கமலம், விவசாய நிலத்தில் இருந்து வீட்டிற்கு வந்தார்.

அதற்குள், மர்ம நபர்கள் வீட்டின் பீரோவை உடைத்து, 9.5 பவுன் நகை, 70,000 ரூபாயை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றனர். அவர்களை கமலம் தடுக்க முயன்றார்.
ஆனால், இருவரும், மூதாட்டியை தாக்கிவிட்டு தப்பி ஓடினர். கமலம் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் வந்து விசாரித்தனர். இதுகுறித்து ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள், தொடர்ந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement