கோவில் நிலத்தில் உயர் மின் அழுத்த பாதை அமைப்பது குறித்து போலீசில் புகார்

பாகூர் : கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், அனுமதியின்றி உயர் மின்னழுத்த பாதை அமைக்கப்படுவது தொடர்பாக, பாகூர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி முதலியார்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில் பரம்பரை தர்மகர்த்தா தேவநாதன் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது;

முதலியார்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம், பாகூர் அடுத்துள்ள பின்னாட்சிக்குப்பம் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில், 100 குழி அளவிற்கு, விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழி சாலை பணிக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்டு விட்டது.

மீதமுள்ள நிலத்தில், முன்னறிப்பு ஏதும் இன்றி அத்துமீறி உள்ளே சென்று உயர் மின் அழுத்த பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. பணிகள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், இது தொடர்பாக, கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளேன்.

ஆதலால், முன் அனுமதியில்லாமல், மேற்படி இடத்தில் எந்தவித பணிகளையும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement