ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு மாதம் குறைவான பென்சன்: சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி

2

புதுடில்லி: ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு மாதம் ஆறு ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பென்சன் வழங்கப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.


உ.பி., மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: 13 ஆண்டுகள் மாவட்ட நீதிமன்றத்தில் நீதித்துறை அதிகாரியாக பணியாற்றினேன். பிறகு ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டேன். ஆனால், ஓய்விற்கு பிறகு நீதித்துறை அதிகாரி பதவிக்காலத்தை கணக்கில் கொள்ள அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பென்சனாக ரூ.15 ஆயிரம் மட்டும் வழங்கப்படுகிறது. எனக்கூறியிருந்தார்.

இதனை நீதிபதிகள் பிஆர்கவாய், பிகே மிஸ்ரா மற்றும் கேவி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது அவர்கள் கூறியதாவது: எங்களுக்கு முன் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் மாதம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் பென்சன் தான் வாங்குகிறார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. அது எப்படி நடக்கும் என்றனர்.


நீதிபதி கவாய் கூறுகையில், ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கான பலன்கள் என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடுகிறது. சில மாநிலங்கள் நல்ல பலன்களை அளிக்கின்றன என்றார். தொடர்ந்து விசாரணை நவ.,27 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement