எனக்கு நிலம், மண், மக்கள் நலன் முக்கியம்; சீமான் திட்டவட்டம்

6

சென்னை: 'எனக்கு என் நிலமும், வளமும், என் மண்ணும் என் மக்களின் நலனும் தான் முக்கியம் ' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.


சென்னை, வளசரவாக்கத்தில் வேலு நாச்சியார் நினைவு நாளையொட்டி, வீர வணக்கம் செலுத்திய பிறகு, சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டங்ஸ்டன் சுரங்கம் குறித்து சட்டசபையில் தி.மு.க., அ.தி.மு.க., நாடகம் ஆடியது. டங்ஸ்டன் ஏலத்திற்கு எதிர்ப்பே தெரிவிக்காமல் சட்டசபையில் தீர்மானம் போட்டு நாடகம். மத்திய அரசுக்கு எதிர்ப்பே கூறாமல் இருந்த தி.மு.க., அரசு சட்டசபையில் ஏதற்கு தீர்மானம் போட்டது? விமான நிலையம், அனல் மின் நிலைய விரிவாக்க திட்டங்களை என்னை மீறி கொண்டு வர முடியாது.


டங்ஸ்டன் டெண்டர் விடப்பட்ட போது தி.மு.க., அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. தேர்தல் அரசியலுக்காகவே டங்ஸ்டனுக்கு எதிராக தீர்மானம் போட்டனர். தரிசு நிலம் போல் தமிழகத்தை மாற்றிவிட்டார்கள். என் நிலத்தில் ஒரு பிடி மண்னை அன்னியன் தொடக் கூடாது என்பதற்காக போராடி இறந்தவன் இனத்தில் இருந்து நாங்கள் வந்தவர்கள். எனக்கு என் நிலமும், வளமும், என் மண்ணும் என் மக்களின் நலனும் தான் முக்கியம்.



கட்சி, தேர்தல் அரசியல், ஓட்டு அரசியல் எல்லாம் எனக்கு நான்காம் பட்சம். நின்று என்றால் நிற்போம். இல்லை என்றால் போய் விடுவோம். ஓட்டை வாங்கி நான் என்ன பண்ண போகிறேன். அதிகாரத்திற்கு வந்து என்ன பண்ண போகிறேன். எனது நிலத்தை எல்லாம் தோண்டி எடுத்துவிட்டு போகட்டும் என்று சொல்வதற்கா? நாங்கள் பல வெற்று தீர்மானத்தை பார்த்தவர்கள். அதனால் தான் போய் போராடினோம். இப்பொழுதும் சொல்கிறேன் மக்களுக்காக போராடுவேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Advertisement