தி.நகர் 'சலானி' ஜுவல்லரியில் திருமண கலெக் ஷன் அறிமுகம்

சென்னை, தி.நகர் சலானி ஜுவல்லரி மார்ட்டில், முதல் முறையாக 'திருமண வைபவ கலெக் ஷன்' நகை தொகுப்பை, நடிகை வாணி போஜன் அறிமுகம் செய்தார்.

இந்த தொகுப்பில், ஒவ்வொரு நபருக்கும் ஏற்ற வகையில், அதிக மற்றும் குறைவான எடையில் தங்கம், வைர நகைகள் வடிவமைக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

சலானி ஜுவல்லர்ஸ் மேலாண் இயக்குனர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:

எங்களிடம் உள்ள சிறப்பான நகை வடிவமைப்பாளர்களை கொண்டு, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒருவர், தன் நிறம் மற்றும் அணிய கூடிய ஆடைக்கு ஏற்ப, எந்த விதமான நகை அணிய வேண்டும் என்பதை அறிந்து, அதற்கு ஏற்ப தங்கம், வைரத்தில் அழகிய வடிவில் நகைகள் செய்து தரப்படும்.

திருமண வைபவம் தொகுப்பில் இடம்பெறும் தங்க நகைகளுக்கு, சேதாரத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்; செய்கூலி இல்லை. வைர நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை. இந்த சலுகைகள் ஜன., 17ம் தேதி கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement