ஞானசேகரன் பிரியாணி கடை அகற்றம்
சென்னை, சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், 19 வயது மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளானார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன், 37, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
இவர், அடையாறு மண்டலம், 173வது வார்டு, காந்தி நகர் 1வது பிரதான சாலையை ஆக்கிரமித்து, இரண்டு ஆண்டுகளாக பிரியாணி கடை நடத்தி வந்தார்.
சில மாதங்களுக்கு முன், ஆக்கிரமிப்பை அகற்றும்போது, இவரது பிரியாணி கடையும் அகற்றப்பட்டது.
ஓரிரு வாரத்தில், உள்ளூர் கட்சிக்காரர்கள் உதவியுடன், மீண்டும் அதே இடத்தை ஆக்கிரமித்து, பிரியாணி கடை நடத்தி வந்தார். பாலியல் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, இவரது பிரியாணி கடையை, அதிகாரிகள் அகற்றினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement