அ.தி.மு.க.,வில் செயலர்கள் நியமனம்


சேலம், டிச. 29-
அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., அறிக்கை:
சேலம் மாநகர் மாவட்ட பேரவை செயலர் பொறுப்பில் இருக்கும் பிரகாஷ், இணை செயலர் பொறுப்பு, பாலசுப்ரமணியன்(எம்.எல்.ஏ.,), செல்வராஜ்(கவுன்சிலர்), மாவட்ட மாணவரணி செயலர் மகபூப் அலி, மாவட்ட வர்த்தக அணி செயலர் ராமராஜ் ஆகியோர், அவரவர் வகித்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
அதேநேரம் சேலம் மாநகர் மாவட்டத்தில், ஜெ., பேரவை செயலராக பரமகுரு, மாணவரணி செயலர் கிேஷார் சங்கர், வர்த்தகர் அணி செயலர் சக்கரவர்த்தி ராஜகோபால், பொதுக்குழு உறுப்பினராக ராம்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலராக சரவணன், ஜெ., பேரவை மாநில துணை செயலராக பாலசுப்ரமணியன்(எல்.எல்.ஏ.,), எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில துணை செயலராக செல்வராஜ்(கவுன்சிலர்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அஸ்தம்பட்டி பகுதி - 1, 2, 3, 4 செயலர்கள் முறையே குமார், பிரகாஷ், முருகன், உமாசங்கர்; அம்மாபேட்டை பகுதி - 1, 2, 3, 4 செயலர்கள் முறையே யாதவமூர்த்தி(கவுன்சிலர்), ஜெகதீஷ்குமார், மகபூப் அலி, தாமரைச்செல்வன்; சூரமங்கலம் பகுதி - 1, 2, 3 செயலர்கள் முறையே மாரியப்பன், பாலு, அசோக்குமார்; கொண்டலாம்பட்டி பகுதி - 1, 2, 3, 4 செயலர்கள் முறையே சிவக்குமார், சரவணன், மீனாட்சி சுந்தரம், பழனி நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement