ஏ.டி.எம்., இயந்திரம் உடைப்பு கொள்ளை அடிக்க முயற்சி


சேலம், டிச. 29-
சேலம், மெய்யனுார் சாலையில், 'எக்விடாஸ்' சிறு நிதியுதவி வங்கி உள்ளது. அதன் பொது மேலாளர் நதியா, 38, நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வங்கி, அதன் வெளியே உள்ள வங்கி ஏ.டி.எம்., அறையை திறந்தார். அப்போது, ஏ.டி.எம்., இயந்திர முன்புறம் உடைந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அங்கிருந்த, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தார். அதில், முகமூடி அணிந்தபடி, உள்ளே புகுந்த ஒருவர், ஏ.டி.எம்., இயந்திரத்தை இரும்பு ராடால் உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட காட்சி பதிவாகி இருந்தது. இதுகுறித்து நதியா புகார்படி, பள்ளப்பட்டி போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement