ஏரி நிரம்பியதால்பூக்கள் துாவி வழிபாடு


ஏரி நிரம்பியதால்
பூக்கள் துாவி வழிபாடு
ஆத்துார், டிச. 29-
ஆத்துார் அருகே, ஒட்டப்பட்டி ஏரிக்கு, சமீபத்தில் பெய்த கன மழையின்போது, பனை ஏரி உள்ளிட்ட நீரோடைகளில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று ஒட்டப்பட்டி ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியது. அங்கு, அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் தொகுதி, எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் தலைமையில், பாசன விவசாயிகள், மக்கள், பூக்கள், தானியங்களை துாவி வழிபட்டனர்.

Advertisement