அய்யப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து

அச்சிறுபாக்கம்:தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் இருந்து சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

மதுராந்தகம் அடுத்த அச்சிறுபாக்கம் அருகே சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று அய்யப்ப பக்தர்கள் 13 பேருடன், மினி வேன் சென்று கொண்டிருந்தது.

அப்போது, திடீரென தேசிய நெடுஞ்சாலையை கால்நடைகள் கடந்தன. கால்நடைகள் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் அடித்துள்ளார்.

இதனால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன், ஒரு பக்கமாக சாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், படுகாயம் அடைந்த, ஒரு பக்தரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற நபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அச்சிறுபாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement