பூஜாரிகள் பேரவை பொதுக்கழு

விஸ்வ ஹிந்து பரிஷத் கிராம கோவில் பூஜாரிகள் பேரவை சார்பில், மாவட்ட பொதுக்குழு கூட்டம் தாராபுரத்தில் நேற்று நடந்தது. கோவை காமாட்சிபுரி ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், மாநில அமைப்பாளர் சோமசுந்தரம், இணை பொது செயலாளர் விஜயகுமார், மண்டல அமைப்பாளர் சின்ன குமரவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் வேலுசாமி, வடக்கு மாவட்ட தலைவர் திருசெல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

கிராமங்களில் பூசாரிகள் அனைவருக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி மாத சம்பளமாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்குதல், 60 வயது நிறைவடைந்த அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஓய்வூதியமாக, 5 ஆயிரம் ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement