வேட்டி வாரத்தில் புதிய ரகங்கள் ராம்ராஜ் காட்டன் அறிமுகம்
திருப்பூர் : திருப்பூரில், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், நிர்வாக இயக்குனர் அருண்ஈஸ்வர் ஆகியோர் நேற்று கூறியதாவது:இன்றைய இளம் தலைமுறையினருக்கு நம் பாரம்பரிய உடையான வேட்டி அணிவதில் ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் கடந்த எட்டு ஆண்டுகளாக ஜன., மாதம் முதல் வாரம் வேட்டி வாரம் கொண்டாடப்படுகிறது.
இதன் 9வது ஆண்டை முன்னிட்டு, ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையின் போது நம் கலாசார உடையான வேட்டி சட்டை அணிந்து கொண்டாடும் வகையில் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ராம்ராஜ் நிறுவனத்தில் கல்சர் கிளப் சட்டை 13 வண்ணங்களிலும், அதற்கு மேட்சிங்கான நிறத்தில் கரைவேட்டியும் விற்பனைக்கு வந்துள்ளது. ஜன., 1 முதல் (இன்று) ராம்ராஜ் ேஷாரூம்கள் மற்றும் அனைத்து முன்னணி ஜவுளி கடைகளிலும் இது விற்பனை செய்யப்படும்.வேட்டி -- சட்டை காம்போ பேக் 695 ரூபாய்க்கு கிடைக்கும். உற்பத்தியாளர், விற்பனையாளர் என யாருக்கும் லாபம் இன்றி, உற்பத்தி விலைக்கே வழங்கும் வகையில் விற்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து புதிய ரக வேட்டி சட்டை காம்போ பேக்குகளை நாகராஜன், அருண் ஈஸ்வர் மற்றும் தலைமை செயல் அலுவலர்கள் செல்வகுமார், கணபதி ஆகியோர் அறிமுகம் செய்தனர்.