காவடியுடன் கிரிவலம் வந்த பக்தர்கள்

பழநி : பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூச தினத்தை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் காவடியுடன் பக்தர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கிரிவலத்தில் வருகை புரிகின்றனர்.

பழநி முருகன் கோயிலுக்கு மார்கழி மாதம் துவங்கியதில் இருந்து பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது.

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை துவங்கியதிலிருந்து பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஈரோடு, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் காவடியுடன் கிரிவீதியில் வலம் வந்தனர்.

சென்னை நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி ஆக்கிரமிப்பு கடைகள் இல்லாததால் பக்தர்கள் எளிதாக மேளதாளங்களுடன், ஆட்டம் பாட்டத்துடன் கிரிவலம் வந்தனர். இதன் பின் முருகன் கோயில் சென்று தரிசனம் செய்தனர்.

Advertisement