கட்டபொம்மனுக்கு இ.பி.எஸ்., மரியாதை
கட்டபொம்மனுக்கு
இ.பி.எஸ்., மரியாதை
சேலம், ஜன. 4--
வீரபாண்டிய கட்டபொம்மனின், 266வது பிறந்த நாளையொட்டி, சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., வீட்டில், மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் படத்துக்கு, இ.பி.எஸ்., மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
நெஞ்சு வலியால் ஏட்டு சாவு
சேலம், ஜன. 4-
சேலம், லைன்மேடு போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் நிர்மல்குமார், 43. அம்மாபேட்டை போலீசில் தலைமை ஏட்டாக பணிபுரிந்தார். 2019 முதல், இருதய நோய்க்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், 2022ல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். நேற்று இரவு, 8:30 மணிக்கு வீட்டில் குளித்துவிட்டு, இரவு பணிக்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்தார். அப்போது நெஞ்சவலி வரவே, ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர். அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.