கறுப்பு பட்டை அணிந்து அலுவலர்கள் பணி



கறுப்பு பட்டை அணிந்து
அலுவலர்கள் பணி
சேலம், ஜன. 4-
காலி பணியிடங்களை நிரப்புதல்; குறைதீர் கூட்டம் நடத்தல்; பணி நெருக்கடியை அரசு நிர்வாகம் சீரமைத்து தருதல் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர், மாநிலம் முழுதும் கறுப்பு பட்டை அணிந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கலெக்டர் அலுவலகத்தில், சட்டையில் கறுப்பு பட்டை அணிந்த அலுவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில துணை தலைவர் திருவரங்கன், மாவட்ட தலைவர் செந்தில், செயலர் ஜான் ஆஸ்டின், பொருளாளர் வடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல் சேலம் மாவட்டத்தில் உள்ள, 20 ஒன்றியங்களில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு, மாலை, 6:00 மணிக்குமேல் வீடியோ கான்பரன்ஸ் நடத்துவதை கண்டித்து, இடைப்பாடி, கொங்கணாபுரம ஒன்றிய அலுவலகங்களில் உள்ள, 50க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.

Advertisement