பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி


பள்ளி ஆசிரியர்களுக்கு
திறன் வளர்ப்பு பயிற்சி
சேலம், ஜன. 4-
தமிழகத்தில் தொடக்க நிலையில் உள்ள ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு, மரபு சார் கற்றல் முறையில் இருந்து நவீன கற்பித்தல் முறைக்கு மாற, ஆண்டுதோறும், திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி சேலம் மாவட்ட துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி, தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லுாரியில் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தொடங்கி வைத்தார். மாநில திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் அகமது இஸ்மாயில், புது சவால்கள், பணி நெருக்கடி, நவீன பணிக்கூறுகளை திறம்பட எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளித்தார். முதன்மை கல்வி அலுவலர் கபீர், சேலம் தொடக்க கல்வி அலுவலர் மான்விழி, தாரமங்கலம் தொடக்க கல்வி அலுவலர் ராஜூ, 650க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement