வாயில் கருப்பு துணி கட்டி ஓய்வூதியர் போராட்டம்
திருப்பூர் : 108 மாத நிலுவை டி.ஏ., உயர்வு, 21 மாத கால நிலுவை தொகை, ஓய்வு பெறும் நாளில் பணப்பலன், குடும்ப ஓய்வூதியருக்கு மருத்துவப்படி, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், வாயில் கருப்பு துணிகட்டி போராட்டம் திருப்பூர் மண்டல அலுவலகம் முன் நேற்று நடந்தது. 51 பெண்கள் உட்பட, 200க்கும் மேற்பட்டோர் வாயில் கருப்பு துணி கட்டியபடி போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஓய்வு பெற்றோர் நல அமைப்பு திருப்பூர் கிளை துணைத்தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் செல்வராஜ், 'போக்குவரத்து கழக ஓய்வூ தியர் கோரிக்கை விஷயத்தில், தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை; வாய் திறக்கவும் மறுக்கிறார்; அவருக்கு எதிர்ப்பை தெரிவிக்க வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தை துவக்கியுள்ளோம்,' என பேசினார்.