மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் : வேட்டைத் தடுப்பு காவலர் பணியை வெளி முகமையிடம் ஒப்படைப்பதை வனத்துறை கைவிட வேண்டும்.

2008 வன உரிமை சட்டத்தை அமல்படுத்தி சிறுமலை,கொடைக்கானல் பழங்குடியினர், பராம்பரிய விவசாயிகளின் சாகுபடி நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,திண்டுக்கல் ஆர்.டி.ஓ.,அலுவலகம் முன் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் அஜாய்கோஷ் தலைமை வகித்தார்.

விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் பெருமாள்,தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெருமாள், மாநில குழு உறுப்பினர் பொன்னுச்சாமி பங்கேற்றனர்.

Advertisement