போக்குவரத்துக்கு இடையூறு

தேவதானப்பட்டி : பெரியகுளம் ஒன்றியம் குள்ளப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்புரத்தில் விவசாயிகளுக்கு களம் அமைக்கப்பட்டுள்ளது.


இதனை பயன்படுத்தாமல் குள்ளப்புரம் செல்லும் நடுரோட்டில் இயற்கை உரத்தை வெயிலில் காயவைக்கின்றனர்.இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அந்தப்பகுதியில் போதிய மின் விளக்கு வசதி இல்லாததால் டூவீலரில் செல்பவர்கள் டயர் வழுக்கி விழுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-

Advertisement