பணக்கடவுளை பார்க்க 5 கிலோ நகைகளுடன் வந்த இவர் யார் ?

4

ஹைதராபாத்: புத்தாண்டு தினத்தில் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க ஒருவர் 5 கிலோ நகைகளை அணிந்தபடி வந்ததை பலரும் வியப்புடன் பார்த்தனர்.


ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் கொண்டா விஜயகுமார். இவர் தெலுங்கானா ஒலிம்பிக் சங்க இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் தனது கழுத்து மற்றும் கைகளில் அதிக பருமன் மற்றும் எடை கொண்ட தங்க ஆபரணங்களை அணிந்து திருப்பதிக்கு வந்தார்.

" நான் அடிக்கடி திருமலை திருப்பதியை வணங்க வருவது வழக்கம், புத்தாண்டில் தரிசிக்க வந்தேன். அதிக நகைகள் அணிவது எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆகையால் இவ்வாறு அணிந்து வந்தேன்" என்றார். இவரை பார்க்க பலரும் கூடினர். அணிந்திருந்த நகை எடை 5 கிலோ இருக்கும்.

Advertisement