ரயிலில் கஞ்சா கடத்தியவர்கள் கைது

திண்டுக்கல்: ஒடிசா மாநிலத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஜோசப், ராஜேந்திரன் ஆகியோரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.




ஒடிசா மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக திருநெல்வேலி செல்லும் புரளியா எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் சேர்ந்த ஜோசப், வேடசந்தூரைச் சேர்ந்த ராஜேந்திரன் 18, ஆகியோர் 8 கிலோ கஞ்சாவுடன் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வந்தனர்.


போலீசாரை கண்டதும் கஞ்சா வைத்திருந்த பேக்கை செடிக்குள் போட்டுவிட்டு வாலிபர்கள் இருவரும் தப்ப முயன்றனர். இன்ஸ்பெக்டர் தூய மணி வெள்ளைசாமி தலைமையிலான போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்து, 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement