ஏழைநாடுகளின் கடன் ரத்து: உலகத்தலைவர்களுக்கு போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்

6

வாடிகன் சிட்டி: "ஏழை நாடுகளின் கடன்களை ரத்து செய்வதன் மூலம் ஒரு நல்ல முன்மாதிரியை அமைக்க வேண்டும்," என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தினார்.

உலகம் முழுவதும் புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டது. செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் புத்தாண்டு தினத்தில் போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.அதனை தொடர்ந்து மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார்.


செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் பேசியதாவது:

உலகத் தலைவர்களுக்கு வேண்டுகோள், எந்தவொரு நாடும் மக்களும் கடனினால் நசுக்கப்படக்கூடாது. எங்கள் தந்தையிடம் நாம் எப்போதும் கேட்பது போல், கடனை முதலில் மன்னிப்பவர் கடவுள். ஆகையால் ஏழை நாடுகள் கடன்களை ரத்து செய்ய வேண்டும்.
ஏழ்மையான நாடுகளின் கடன்களை ரத்து செய்வதன் மூலம் அல்லது கணிசமாகக் குறைப்பதன் மூலம் முன்னுதாரணமாக இருக்கும்படி கிறிஸ்தவ பாரம்பரியங்களைக் கொண்ட நாடுகளின் தலைவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

உலகெங்கிலும் உள்ள மோதல்கள் நிறைந்த பகுதிகளில், நீதி மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கு ராஜதந்திர ரீதியாக உழைக்கும் அனைவருக்கும் நன்றி.

மோதலால் பாதிக்கப்பட்ட பல பிராந்தியங்களில், பேச்சுவார்த்தைகளை நடத்துபவர்கள் அனைவருக்கும் எனது நன்றி. அனைத்து சண்டைகளும் முடிவுக்கு வரவும், அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் தீர்க்கமான கவனம் செலுத்தவும் பிரார்த்தனை செய்வோம்.

போர் அழிவை நோக்கிதான் செல்லும், அது எப்போதும் அழிவைதான் தரும். போர் எப்போதும் தோல்விதான். அமைதிக்காக பாடுபடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.

இவ்வாறு போப் பிரான்சிஸ் பேசினார்.

Advertisement